‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அஜித்தின் வேதாளம் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத். அதனால் அந்த படத்தைத் தொடர்ந்து அஜித்தைக்கொண்டு சிவா இயக்கி வரும் விவேகம் படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்திற்கு வேதாளம் படத்தை விடவும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான டியூன்களை ரெடி பண்ணி அதை அஜித்தின் கவனத்துக்கு அனுப்பி வரும் அனிருத், அவர் ஓகே பண்ணும் டியூன்களை பாடல்களாக்கி வருகிறார்.
மேலும், இந்த படத்தில் முதன்முறையாக சிக்ஸ்பேக் கெட்டப்பில் அஜித் நடிக் கும் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் அனிருத் அவர்களை விட கடும் உற்சாகத்தில் இருக்கிறாராம். அதோடு, சிக்ஸ்பேக் அஜித் என்ட்ரி கொடுக்கும் காட்சிக்கு ஒரு பாடல் வேண்டும் என்று டைரக்டர் சிவா சொன்னதை அடுத்து, இரவு பகலாக அதற்கான டியூனை வித்தியாசமான இசைக்கருவிகளைக்கொண்டு உருவாக்கி வருகிறாராம் அனிருத்.