இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சாய்ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. கோர்ட்டு, கேஸ் என பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வந்த இந்த படத்தின் டைட்டீலில் மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என்று குறிப்பிட்டிருந்ததால், அது ஒரு பெரும் சர்ச்சையை சந்தித்தது. அதையடுத்து, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. டைரக்டர் சாய் ரமணி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போவதாக சொல்லி அப்படி செய்து விட்டார் என்று ஜகா வாங்கினார் லாரன்ஸ்.
இந்நிலையில், தற்போது இன்னொரு சர்ச்சையையும் சந்தித்துள்ளது மொட்ட சிவா கெட்ட சிவா படம். இந்த படத்தில் எம்ஜிஆரின் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம் -என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ள னர். இன்றைய காலகட்டத்து ரசிகர்கள் வரை அந்த பாடலைக்கேட்டு ஆட்டம் போட்டு வரும் நிலையில், ரீ-மிக்ஸ் என்ற பெயரில் அந்த பாடலின் இனிமையையே மாற்றி விட்டார் இசையமைப்பாளர் அம்ரீஷ்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எம்ஜிஆரின் ரசிகர்கள், மக்கள் திலகத்தின் மறக்க முடியாத பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து விட்டனர். அதோடு, வித்தியாசமாக நடனமாடுகிறோம் என்ற சொல்லி லாரன்சும், நிக்கி கல்ராணியும் அந்த பாடலை மேலும் கெடுத்து விட்டனர் என்றும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.