ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு-யுவன் ஷங்கர் ராஜா இருவரும் நெருக்கமான நண்பர்கள். அதன்காரணமாக சிம்பு நடித்த பல படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார். யுவனின் இசையில் சிம்புவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் தான் நடித்த இது நம்ம ஆளு படத்தில் தனது தம்பி குறளரசனை இசையமைப்பாளராக்கிய சிம்பு, இப்போது சந்தானம் நடித்து வரும் சக்கை போடு போடு ராஜா படத்தில் தானும் இசையமைப்பாளராகியிருக்கிறார்.
இந்த படத்தில் தனது அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு பாடல் பாட வைத்து புதுமை செய்த சிம்பு, நேற்று தனது நண்பரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவையும் ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார். அப்படி யுவன் பாடிய பாடலின் ஒரு பகுதியை வீடியோவுடன் தனது டுவிட்டரிலும் வெளியிட்டிருக்கிறார் சிம்பு.