'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். ஆக்ஷன் ஸ்பெலிஷ்டான இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 101வது திரைப்படம் உருவாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ரூ 32 கோடி செலவில் இப்படம் தயாராகவுள்ளதாம்.
இதில் பாலகிருஷ்ணாவின் சம்பளம் மட்டும் ரூ 10 கோடியாம். கௌதமிபுத்ர சடர்கனி படத்தில் பாலகிருஷ்ணாவின் சம்பளம் ரூ 5 முதல் 7 கோடிக்குள் தான் இருந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலகிருஷ்ணா தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்திவிட்டார். பாலகிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகிக்கான தேர்வில் தான் பூரி ஜெகன்நாத் தற்போது ஈடுபட்டுள்ளார். விரைவில் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளிவரும் என கூறப்படுகின்றது.