Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

11 மார், 2017 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Fans-fun-Aishwarya-Dhanushs-dance-in-UN

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையின் பெண்கள் நல்லெண்ண தூதராகவும் இருக்கிறார். கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபையில் அவருடைய பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.


அந்த நிகழ்ச்சி குறித்து பிரபல நடனக் கலைஞர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். பிரபல நடனக் கலைஞர் அனிதா ரத்னம், “பரதநாட்டியம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. இது பரதநாட்டியத்தின் கேலிசி சித்திரம்” என தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவருஐடய அந்த ஃபேஸ்புக் பதிவில் பரதம் தெரிந்த பலரும் தங்களது கருத்துக்களை ஆவேசமாகப் பகிர்ந்துள்ளார்கள்.


டிவிட்டரில், “ஐநா சபையில் பரதநாட்டியத்தின் பரிதாப நிலை” என்றும் அனிதா ரத்னம் பதிவிட்டுள்ளார்.


கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியை விமர்சித்து பல்வேறு விதமான மீம்ஸ்களும், வீடியோ பதிவுகளும் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றன.


கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில் தனுஷ் அதிகம் விமர்சிக்கப்பட்டவராக இருந்தார். இந்த வாரத்தில் தனுஷிவின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்.


இந்தியா பெருமைப்படுகிறது - ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு


இதனிடையே ஐ.நா., சபையில் பரத நாட்டியம் ஆடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை ஐஸ்வர்யா பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, ஐ.நா., சபையில் நடனமாடிய ஐஸ்வர்யா தனுஷூக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டும் தெரிவித்துள்ளார். அதில், மகளிர் தினத்துக்காக நியூயார்க்கில், ஐக்கிய நாடுகள் சபையில், ஐஸ்வர்யா நடனமாடியதற்கு வாழ்த்துகள். இந்தியா, உங்களை எண்ணி பெருமைப்படுகிறது என்றார். இதேபோல, பா.ஜ., முன்னணித் தலைவர்கள் பலரும் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.Advertisement
படம் அல்ல, பாடம் - நிசப்தம் படத்திற்கு குவியும் பாராட்டு!படம் அல்ல, பாடம் - நிசப்தம் ... மார்ச் 16-ல் டிரைலர், 25ல் இசை : பாகுபலி-2 பரபரப்பு ஆரம்பம் மார்ச் 16-ல் டிரைலர், 25ல் இசை : பாகுபலி-2 ...


வாசகர் கருத்து (17)

vinu - frankfurt,ஜெர்மனி
17 மார், 2017 - 00:25 Report Abuse
vinu ரஜினி பரதம் ஆடின மாதிரியை ஆடி இருக்கா. புரிந்தவன் கெட்டிக்காரன்.
Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
13 மார், 2017 - 14:45 Report Abuse
A. Sivakumar. ஒரு நெட்டிஸன் சொல்றார், எனக்கு பரதநாட்டியம் தெரியாது, ஆனால் இது பரதநாட்டியம் இல்லேன்னு தெரியும். பரதநாட்டியம் என்றால் என்னவென்றே தெரியாத நீங்க எதுக்கு கருத்து சொல்லறீங்க? பரதநாட்டியத்தில் நானும் ஒரு ஜீரோதான். ஆனால், ஐஸ்வர்யா கொடுத்த பேட்டியைப் படித்துப் பார்த்தேன் (தினமலரில் மார்ச் ஐந்தாம் தேதி). அவருடைய ஆட்டத்தின் பின்புலமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, பயிற்சி மற்றும் உழைப்பு பற்றி தெரிஞ்சுக்க முடியுது. அனிதா ரத்னம் ஒரு பிரபல நடனக் கலைஞர் என்பதால் அவர் சொன்னது சரியாக இருக்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது? பாரம்பரியம் என்று நீங்க நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றில் சிறு மாற்றங்கள் செய்து ஒரு முயற்சியைத் தந்தால் இப்படித்தான் விமர்சிப்பீங்களா? இதையே நீங்க செய்திருந்து, உங்களுக்கு இப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தால் நீங்க தாங்குவீங்களா? ஒரு வித்தியாசமான முயற்சியைப் பாராட்ட மனமில்லேன்னாலும், இப்படி விமர்சித்திருக்கத் தேவையில்லை. நெட்டிஸன்கள் சொன்னால் சரியா இருக்கும் என்ற மனநிலையை முதலில் மாற்றுங்கள். இப்போ ஒவ்வொரு கட்சியும், இவர்களுக்குக் கூலி கொடுத்து, இவர்களைப் பயன்படுத்தி தங்கள் சார்பான கருத்துக்களை வெளிவிடுகின்றன, இவற்றை நாம் பின்பற்ற முடியுமா? வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தேவையில்லாமல் இழுத்துக்கொண்டு போனது இதே கூலிக்காரப் பட்டாள நெட்டிஸன்கள்தானே? ஒருத்தரைப் பிடிக்கலேன்னா, அவரோட குழந்தைகள் மீது கூட விவஸ்தையில்லாமல் இணையத் தாக்குதல் நடத்த முடியும் என்பதற்கான ஒரு உதாரணம்தான் இது.
Rate this:
Muthu Kumar - Tiruchirappalli,இந்தியா
12 மார், 2017 - 11:43 Report Abuse
Muthu Kumar இந்தியா மரியாதை ஐ . நா சபையில் போச்சு தமிழ்நாட்டு மரியாதை இந்தியாவில் போச்சு
Rate this:
ram - tr  ( Posted via: Dinamalar Android App )
12 மார், 2017 - 08:59 Report Abuse
ram அவர்களுக்குத்தான் இந்த பரதநாட்டியம் தெரியும்
Rate this:
காரியவாதி - Salem,இந்தியா
12 மார், 2017 - 00:13 Report Abuse
காரியவாதி அவுங்க ஒழுங்கா தான் ஆடினாங்க, உனக்கு தான் சரியா பார்க்க தெரியல.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in