'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் சேனலில் அதிர்ஷ்டலட்சுமி தொடங்கி ஜூனியர் சூப்பர் ஸ்டார் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் இளமை புதுமை அர்ச்சனா. தான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக நடத்தி வரும் அர்ச்சனா, சினிமாவிலும் ஜாலியான கலகலப்பான வேடங்களிலேயே நடிக்க ஆசைப்படு வதாக சொல்கிறார்.
அதுகுறித்து அர்ச்சனா கூறுகையில், தற்போது ஜீ தமிழில் நான் பங்கேற்றும் நிகழ்ச்சிகள் எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேயர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ், சைத்தான் கா பச்சா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறேன். இதில், வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ஆம்பூர் அனு என்றொரு மாஜி ஹீரோயினி வேடத்தில் நடித்துள்ளேன். ரொம்ப ஜாலியான கலக்கலான வேடம். ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன்.
கதைப்படி, மாஜி ஹீரோயினியான நான், ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு ஓவர் ஆக்டிங் செய்தபடி அலம்பல் செய்யும் வேடம். பின்னர், எனது தங்கையை நடிகையாக்க முயற்சி எடுப்பேன். இதில் எனது தங்கையாக இனியா நடித்துள்ளார். அதேபோல், சித்தார்த்தின் சைத்தான் கா பச்சா படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். அதுவும் கலகலப்பான வேடம்தான். தொடர்ந்து கண்ணைக்கசக்கிக்கொண்டு நடிக்காமல் இந்த மாதிரி கலகலப்பான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார்.
அவரிடத்தில், நீங்கள் புதிய நிகழ்ச்சி ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் கசிந்துள்ளதே? என்று கேட்டால், அப்படி எந்த முயற்சியிலும் நான் இறங்கவில்லை. நான் சென்னையில்தான் 12 வருடங்களாக இருந்து வருகிறேன். அப்போது நான் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக செய்தி பரப்பி விட்டார்கள். எனக்கு விசாகூட கிடையாது. அதேபோல்தான் நான் நிகழ்ச்சி இயக்கப்போவதாக வெளியாகியிருப்பதும் ஒரு வதந்திதான் என்கிறார் அர்ச்சனா.