'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜன் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். நடிகரான பிறகு படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றால் தான் ஒரு முன்னாள் இயக்குனர் என்கிற முறையில் இளவட்ட டைரக்டர்களிடம் எந்தவித ஆளுமையையும் செலுத்துவதில்லையாம். மாறாக, அவர்கள் எந்த மாதிரியான காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதை அப்படியே நடித்துக்கொடுத்துவிட்டு வருகிறாராம்.
இதுபற்றி பாண்டியராஜன் கூறுகையில், சினிமாவில் நாம் நடிகரான பிறகு டைரக்டர் என்பதை மனதில் கொள்வதில்லை. நடிகராக படப்பிடிப்பு தளங்க ளுக்கு செல்லும்போது நடிகனுக்குரிய வேலையை மட்டுமே செய்வேன். அதோடு, கேரக்டர் பிடிக்கவில்லை. இது ரீச் ஆகாது என்று என் தனிப்பட்ட கருத்துக் களை முன்வைப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குனர்கள்தான் பொறுப்பு. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடித்து விட்டு வருகிறேன். நடிகரானதில் இருந்து இந்த பாலிஸியைதான் நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் பாண்டியராஜன்.