ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் - அலி அப்பாஸ் கூட்டணியில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் ‛ஏக்தா டைகர்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் ‛டைகர் ஜிந்தா ஹை' என்ற பெயரில் உருவாகிறது. சல்மான்-கத்ரீனாவே இதில் தொடருகிறார்கள், அலி அப்பாஸ் இயக்குகிறார். யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில் இதில் மற்றுமொரு நடிகராக பரேஷ் ராவலும் இணைந்துள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் கூறியிருப்பதாவது... பரேஷ் ராவலின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. இந்தப்படத்தில் அவருக்கு மிகவும் ஸ்பெஷலான கேரக்டர். முதன்முறையாக பரேஷ், யாஸ் ராஜ் பிலிம்ஸில் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.
‛டைகர் ஜிந்தா ஹை' படம் இந்தாண்டு டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.