Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோகத்தில் பாண்டிராஜ் உதவியாளர்கள்

10 மார், 2017 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Director-Pandirajs-assistants-in-feeling

நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள 'எங்கிட்ட மோதாதே' மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'புரூஸ்லீ' படங்கள் இன்று வெளியாகவிருந்தன. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தினால் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. நட்டி நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் முதலானோர் நடித்துள்ள 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கியிருப்பவர் ராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குநர். இவர் யார் தெரியுமா? இயக்குநர் பாண்டிராஜின் சிஷ்யர்.


ஜி.வி.பிரகாஷ்குமார், கீர்த்தி கார்பண்டா நடித்துள்ள 'புரூஸ்லீ' படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டிராஜும் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்தான். எங்கிட்ட மோதாதே, புரூஸ்லீ இரண்டு படங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் துவங்கப்பட்ட படங்கள். இரண்டு படங்களுக்குமே பல ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டு, அந்த தேதிகளில் வெளியாகாமல் இறுதியாக மார்ச் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு நேரத்தில்தான் மொட்ட சிவா குறுக்கே புகுந்துவிட்டது.


ஒரு இயக்குநரிடம் உதவியாளர்களாக இருந்த 2 இயக்குநர்கள் இயக்கிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருந்த நிலையில் இப்படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. லேட்டஸ்ட் நிலவரப்படி, வருகிற 17-ஆம் தேதியை 'புருஸ்லீ' படத்துக்கு புதிய ரிலீஸ் தேதியாக குறித்திருக்கிறார்கள்.


'எங்கிட்ட மோதாதே' படத்திற்கு வருகிற 24-ஆம் தேதியையும் குறித்திருக்கிறார்கள். மார்ச் 10 அன்று தங்களுடைய படங்கள் வெளியாகாமல்போனதால் எங்கிட்ட மோதாதே, புரூஸ்லீ பட இயக்குநர்கள் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in