ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான், ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். நடிப்பதோடு மட்டுமல்லாது தயாரிப்பு பணியையும் தொடங்கியிருக்கும் சல்மான், ஆடைகளை விற்பனை செய்ய ‛பீயிங் ஹியூமன்' என்ற பிராண்டினை சல்மான் கான் ஏற்கனவே நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், இப்போது புதிதாக ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் சல்மான்.
‛பீயிங் ஸ்மார்ட்' என்ற பெயரில் தனது நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளார். இதில் தற்போதைய டிரெண்ட்டிற்கு ஏற்றபடி புதியரக ஸ்மார்ட் போன்களை வெளியிட உள்ளார். இந்த போன்களை தயாரிக்க சீனாவை சேர்ந்த ஆலையை ஏற்கனவே தேர்வு செய்துள்ளதாகவும், அவர் வெளியிட இருக்கும் ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.20,000-க்கும் குறைந்த விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் தனது போனை சல்மான் வெளியிடுவார் என தெரிகிறது.