மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிவாஜி கணேசன் - சரோஜா தேவி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். இதில் விஜய்க்கு ஜோடி சிம்ரன். அதையடுத்து வேகமாக கோலிவுட்டில் வளர்ந்து நின்ற சிம்ரன் இடுப்பை வளைத்து ஆடும் நடனத்தில் தமிழ்நாட்டு ரசிகர்கள் கிறுங்கிக்கிடந்தனர். அந்த வகையில், ரஜினி தவிர அனைத்து மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடித்த சிம்ரன், பத்து வருடங்களாக மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்திருந்தார். அதன்பிறகு திருமண பந்தத்தில் இணைந்தபோது அவரது மார்க்கெட் வீழ்ச்சியடைந்தது.
இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர விரும்பும் சிம்ரன், தனது கணவர் மகன்களுடன் சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து படவேட்டை நடத்தி வந்தார். அதன்காரணமாக சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர், தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். குறிப்பாக, நாயகன் அரவிந்த்சாமிக்கு உதவி செய்யும் ஒரு வேடத்தில் நடிக்கும் சிம்ரனுக்கு இந்த படத்தில் நடிக்க 23 லட்சம் சம்பளம் பேசியுள்ளனர். ஆனால் ரூ. 30 லட்சம் கேட்டு பேச்சுவார்த்தைக்குப்பிறகு இந்த சம்பளத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் சிம்ரன்.