மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61-வது படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதனால் இந்த படத்திற்காக ரஜினி நடித்த மூன்றுமுகம் டைட்டீலை பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கும் விஜய், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பு கலந்து கொண்டு வருகிறார். அந்தவகையில், இந்த படத்திற்காக அவர் 120 நாட்கள் மொத்த கால்சீட்டாக கொடுத்திருக்கிறார். அதனால் திட்டமிட்டபடி ஒருநாளைகூட வீணடிக்காமல் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் அட்லி.
அதோடு, முன்பெல்லாம் தான் நடித்த காட்சிகளை ஒவ்வொரு ஷாட்டிலும் நடித்து முடித்ததும் பார்க்கும் விஜய், அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த ஷாட்டில் மீண்டும் நடிக்க முடிவெடுக்கிறார். அதுமட்டுமின்றி, அடுத்தநாள் நடிக்க வேண்டிய காட்சியில் எப்படி எப்படி நடிக்கலாம் என்பதை அட்லி மற்றும் கேமராமேனுடன் அமர்ந்து சிறிது டிஸ்கஸ் பண்ணிவிட்டே வீட்டிற்கு கிளம்புகிறார் விஜய்.