ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வி.டி.வி.கணேஷ் தயாரரிப்பில் சந்தானம் நடிக்கும் படம் - 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைக்கிறார். தான் தயாரிக்கும் படத்துக்கு சிம்புவை இசையமைக்க வைத்துவிட்டார் விடிவி கணேஷ். சந்தானம் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடிக்கும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்த ஐந்து பாடல்களையும் ஒலிப்பதிவு செய்து விட்டாராம் சிம்பு!
இந்த 5 பாடல்களில் 'வா முனிமா வா' என்று துவங்கும் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து, அந்தப்பாடலை தன்னுடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தரை பாட வைத்து பதிவு செய்துள்ளார். இந்தப்பாடல் ஹிட்டானால் தொடர்ந்து பாடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் உஷா ராஜேந்தர். அதைப்போல சந்தானத்தின் அறிமுகப் பாடலை அனிருத்தை பாட வைத்து பதிவு செய்துள்ளார் சிம்பு.
வைரமுத்து எழுதியுள்ள 'காதல் தேவதை...' என்று துவங்கும் பாடலை யுவன் சங்கர் ராஜாவை பாட வைத்துள்ளார். இத்துடன் இந்த படத்தில் இரண்டு புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார் சிம்பு! .அவர்களில் ஒருவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன். இன்னொருவர் கீர்த்தனா! இப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிந்துவிட்டநிலையில் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு வருகிற 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.