டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை, சஞ்சய்யாக ரன்பீர் நடிக்கிறார். சஞ்சய்யின் வாழ்க்கை படத்தில் அவரது அப்பா ரோலான சுனில் தத் ரோலுக்கு நடிகர் அமீர் கானை நடிக்க கேட்டுள்ளனர், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதுப்பற்றி நடிகர் அமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பாதவது... ‛‛சஞ்சய் படத்தை இயக்கும் படக்குழுவினர் என்னை இப்படத்தில் நடிக்க சொல்லி கேட்டனர். சுனில் தத்தின் ரோலில் நடிக்க நான் ஆர்வப்படவில்லை என்று கூறிவிட்டேன்'' என்றார்.
அமீர் மறுத்த சுனில் தத் ரோலில் தற்போது நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது, இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.