தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'தெறி' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி மாதம் 12ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பத்தில் நன்றாகவே போய்க் கொண்டிருந்த வசூல், அடுத்த சில நாட்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பமான பிறகு அப்படியே வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என அதிகாரப்பூர்வமாக விளம்பரம் வேறு கொடுத்தார்கள். ஆனால், நான்கு நாட்களில் 100 கோடி வசூல் ஆகவில்லை, மொத்த வசூலே 100 கோடிதான் என்கிறது வியாபார வட்டாரம். 100 கோடி ரூபாய் மொத்த வசூலைத் தாண்டியிருந்தாலும் படத்தின் வியாபாரத் தொகையான 75 கோடி ரூபாயை நிகர வசூல் தொடவில்லை என்பதுதான் உண்மை.
விளம்பரச் செலவுகள், இரவு செலவுக்ள போக படத்தின் நிகர வசூல் 65 கோடி அளவில்தான் ஆகியிருக்கிறது. அதனால் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் சில ஏரியாக்களில் படம் லாபத்தைத் தேடிக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளிலும், கேரளாவிலும் இப்படம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட பெரிய ஏரியாக்களைத் தவிர மற்ற ஏரியாக்களில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட அதிக விலைக்கு விற்கப்படுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள். 'பைரவா' படத்தைப் பொறுத்தவரையில் முந்தைய விஜய் படங்களை விட செலவு குறைவாகத்தான் செய்திருந்தார்கள். அந்தப் படத்தின் கதைக்கு அப்படிப்பட்ட செலவு தேவைப்படவில்லை. ஆனாலும், படத்தின் வியாபாரத்தை செலவு செய்த தொகையை விட அதிகமாக வைத்து விற்றதால்தான் வசூலிலும் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். விற்ற விலையை விட சில கோடிகள் குறைவாக விற்றிருந்தால் 'பைரவா' லாபகரமான படமாக இருந்திருக்கும். இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படம் லாபத்தைக் கொடுத்திருக்கிறது. சாட்டிலைட் உரிமையையும் சேர்த்தால் அவர்களுக்கு இன்னும் லாபம்தான்.
'பைரவா' படத்தின் கணக்கே இப்படியிருக்க விஜய், தற்போது நடித்து வரும் அடுத்த படத்தில் அவருடைய சம்பளம், இயக்குனரின் சம்பளம் ஆகியவையே 40 கோடியைத் தாண்டியுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறார்கள். 'பைரவா' வசூல் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விஜய்யின் அடுத்த பட வியாபாரத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றே அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.