ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகம் இந்த ஆண்டில் இரண்டு படங்களை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. 'பாகுபலி 2 மற்றும் 2.0' ஆகிய இரண்டு படங்களுக்குத்தான் அந்த எதிர்பார்ப்பு. 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. '2.0' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
'பாகுபலி 2' படத்தின் டிரைலரை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டையும் இந்த மாதக் கடைசியில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இம்மாதம் 26 அல்லது 28ம் தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விழாவை நடத்த உள்ளார்கள்.
பொது இடங்களில் இந்த விழாவை நடத்தினால் லட்சக்கணக்கில் திரண்டு வரும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக இந்த ஏற்பாடாம். அனைவருக்கும் அனுமதி அட்டை கொடுத்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இசை விழாவிற்குப் பின்னர் மற்ற மொழிகளில் வெளியாகும் மாநிலங்களுக்கும் சென்று சில விழாக்களை நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.
சென்னை, மும்பை, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் 'பாகுபலி 2' குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பயண ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்கிறார்கள்.