ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கதாபாத்திர தேர்விலிருந்து காட்சி அமைப்புகளில் இருந்து அனைத்திலும் மிகுந்த கவனம் தேவை. தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படங்களான 'பயோபிக்' படங்கள் அதிகம் வந்ததில்லை.
'பாரதி, பெரியார், ராமானுஜன்' என சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களுக்குப் பரிச்சயமாக இருந்திருக்கின்றன. அந்தப் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் தவிர வேறு எந்த முன்னணி இயக்குனர்களும் 'பயோபிக்' படங்களில் கவனம் செலுத்தவில்லை.
தமிழில் நடிக, நடிகையரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களை யாருமே எடுக்க முன் வருவதில்லை. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என, 50, 60களில் முன்னணி நாயகியரில் முக்கியமான நாயகியாக பல அற்புதமான படங்களில் நடித்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும், 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கிலும் படமாக்க உள்ளார்கள். இப்படத்தின் முதல் பார்வையை நேற்று வெளியிட்டார்கள்.
சாவித்ரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள். சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் எப்படி பொருத்தமாக நடிக்கப் போகிறார் என்று இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டது. இதுவரை நடித்த படங்களில் சும்மாவே சிரித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியிடமோ ஒரு அழகு கலந்த அமைதி அவரது முகத்தில் இருக்கும். அப்படியிருக்க கீர்த்தி சுரேஷ் எப்படி அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்துவார் எனப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சாவித்ரி என்றதுமே அவரது காதல் கணவர் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனும் நினைவுக்கு வந்துவிடுவார். சாவித்ரியின் திரையுலக வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் ஜெமினி கணேசன் மிகவும் முக்கியமானவர். இவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது மட்டுமல்ல, தெலுங்கில் சாவித்ரி நடித்த பல படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களது கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என டோலிவுட்டிலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
படத்தை இயக்க உள்ள நாக் அஸ்வின் முன்னால் இப்படி பல சவால்கள் காத்திருக்கின்றன. கதாபாத்திரத் தேர்வுகளில் பொருத்தமானவர்களை அவர் எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார்...?.