இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜனதா கேரேஜ் படத்தை உருவாக்கிய இயக்குனர் கொரட்டலா சிவா, நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மைத்திரி மூவீஸ் நிறுவனம் இணைந்து அப்படத்தின் வெளியீட்டின் போது, பசவடரகம் இன்டோ அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் குலுக்கல் முறையில் நேயர் ஒவருவரை தேர்வு செய்து ஜனதா கேரேஜில் பயன்படுத்திய பைக்கும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி நிகழ்ச்சியின் வாயிலாக ரூ 10 லட்சம் நிதி திரட்டிய ஜனதா கேரேஜ் படக்குழு, அதனை ஐதரபாத்தில் உள்ள பசவடரகம் இன்டோ அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனையாக்கு நன்கொடையாக கொடுத்துள்ளனர். மேலும் நலங்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு ஜனதா கேரேஜ் பைக்கையும் ஜூனியர் என்.டி.ஆர் வழங்கியுள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகர்கரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமா ராவ் அவர்களின் மனைவி, புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். இதனால் என்.டி.ராமா ராவ் தனது மனைவி பெயரில் பசவடரகம் ராமா ராவ் மெமோரியல் கேன்சர் எனும் நிறுவனத்தை ஐதராபாத்தில் துவங்கினார். பின்னாளில் அந்நிறுவனம் இன்டோ அமெரிக்கன் கேன்சர் குழுமத்துடன் இணைந்து, பசவடரகம் இன்டோ அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனையாகவும், ஆராய்ச்சி குழுமமாக மாறியது.