'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், கட்டமராய்டு படத்தில் நடித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் கட்டமராய்டு படத்தை சரத்மாரர் தயாரிப்பில் இயக்குனர் டாலி இயக்குகின்றார். ஆக்ஷ்னுக்கு முக்கியத்துவம் தரும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுடனான ரொமான்ஸ் காட்சிகள் குறைவாக இருக்கட்டும் என பவன் கல்யாண் இயக்குனரிடம் கூறியதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ருதிஹாசனை தூக்கி நடிக்க வேண்டிய காட்சியை இயக்குனர் விளக்கியதும் பவன்கல்யாண் அக்காட்சியை வேண்டாம் என கூறிவிட்டாராம். பவன் கல்யாணுக்கு முதுகுவலி இருப்பதாலேயே அவர் இக்காட்சியை மறுத்ததாகக் கூறினாலும், இதுபோல் ஸ்ருதிஹாசனுடனான வேறு சில காட்சிகளையும் பவன் கல்யாண் திருத்தியதாக கூறப்படுகின்றது.
தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகின்றது. இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. மார்ச் 24ல் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.