ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் வெற்றி மாறன் தற்போது தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் லென்ஸ் என்ற படத்தை தயாரிக்கிறார். மினி ஸ்டூடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரிக்கிறார். ஜெயபிரகாஷ், இராதாகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது தற்போது மக்களிடையே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் சைபர் க்ரைம் தொடர்பான கதை. பெண்களை ஆபாச படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவேற்றி சந்தோஷப்படும் சைக்கோக்கள். அல்லது அதை காட்டி மிரட்டும் கிரிமினல்கள் பற்றிய திகில் படம். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.