ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் குடும்ப தொடர்கள், மாயாஜால தொடர்கள், புராண தொடர்கள், சரித்திர தொடர்கள் என விதவிதமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. முதன் முறையாக ராஜ் டி.வியில் குழந்தைகளை மையமாக கொண்டு அட்டகாசம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
அஞ்சலி, பசங்க போன்ற திரைப்படங்களின் பாணியில் இந்த தொடர் உருவாகி வருகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் 10 சிறுவர்களின் சேட்டைகளாலும், விளையாட்டாலும் வரும் சிக்கல்களையும் காமெடியாக சொல்கிற தொடர். பெற்றவர்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பாடத்தோடு குழந்தைகள் உலகம் எப்படி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பதையும் காட்ட இருக்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள், அப்பார்ட்மென்ட் செகரட்டரி, வாட்ச்மேன் போன்ற கேரக்டர்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சென்னை புறநகரில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.