Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்னணி ஹீரோவாகும் ஆசை இல்லை!: ஜி.வி.பிரகாஷ்

09 மார், 2017 - 03:23 IST
எழுத்தின் அளவு:
No-desire-to-lead-hero:-GVPrakash

நடிப்பு, இசையமைப்பு என, படு பிசியாக இயங்கி வருகிறார், ஜி.வி.பிரகாஷ். லேட்டஸ்ட் நிலவரத்தின்படி, அவரது கைவசம், 10 படங்கள் இருக்கின்றன. 'கோடம்பாக்கத்தின் செல்ல பிள்ளை' என, அழைக்கப்படும் அவர், புருஸ்லீ படம் பற்றியும், திரையுலகம் பற்றியும் சில விஷயங்களை மனம் திறந்து பேசுகிறார்:


புருஸ்லீ படம் பற்றி?


புதுமுக இயக்குனர், பிரகாஷ் பாண்டிராஜ் இயக்கத்தில், நான் நடித்துள்ள படம். இதில், ரொம்ப ஸ்டைலான, ஜி.வி.பிரகாஷை ரசிகர்கள் பார்க்கலாம். மக்களுக்கு, 'ரீச்' ஆகிற மாதிரி இருக்கணும் என்பதால், புரூஸ்லீ என, பெயர் வைத்துள்ளோம். திருச்சி பின்னணியில் நடக்கும் கதை. ஆக் ஷனும், காதலும் கலந்த கலவையாக, இந்த படம் இருக்கும்.


உங்க படங்கள், ஒரே மாதிரியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதே?


உண்மை தான்; தொடர்ந்து, மூன்று காமெடி படங்கள் நடித்ததால், அந்த மாதிரி முத்திரை பதிந்து விட்டது. வியாபாரத்துக்காக அப்படிச் செய்தேன்; ஆனால், அதை தொடர விரும்பவில்லை. இப்போதெல்லாம், காமெடி 'சப்ஜெட்' வேண்டாம் என, சொல்லி விடுகிறேன்.


நாமும் நடிக்கலாம் என்ற தைரியமான முடிவு, எப்படி வந்தது?


சூப்பராக நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது; ஆனால், ரசிகர்களுக்கு, அவங்க ரசிக்கிற மாதிரி, திரையில் வருவேன் என, நம்புகிறேன். அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களிடம் சேருகிறேன்; அவர்கள் வழி நடத்துவது, சொல்லி கொடுப்பது, என் வளர்ச்சிக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.


எந்த நடிகையுடன் நடிக்கும் போது, கல கலப்பாக இருப்பீங்க?


நிக்கி கல்ராணி, படப்பிடிப்பில் இருந்தால், அந்த இடமே அதகளமா இருக்கும். இரண்டு படம், அவங்களோட நடிச்சிட்டேன். அதட்டல், உருட்டல், மிரட்டல்ன்னு அடாவடி செய்ற பொண்ணு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஜாலியாக இருக்கும் பொண்ணு நிக்கி. பக்கத்தில் யார் இருக்காங்க, என்ன பேசணும், என்றெல்லாம் கவலைப்படாமல், எதையாவது பேசிட்டு, போயிட்டே இருக்கும்.


உயரம் உங்களுக்கு, பிரச்னையா இருக்கா?


அப்படி எனக்கு தோன்றவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், ஒரு மிடில் கிளாஸ் பையன் மாதிரித் தான், என் தோற்றம் இருக்கிறது. எனக்கு எந்த கேரக்டர் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பது, இயக்குனர்களுக்கு தெரியும். அந்த கேரக்டரை சரியாக உள்வாங்கி செய்ய வேண்டும் என, நினைக்கிறேன்; மற்றபடி எதுவும் இல்லை.


நடிப்பு, இசை, எது பிடித்தது?


இரண்டுமே ரொம்ப பிடிக்கும். 10 ஆண்டுகளாக இசையமைப்பில் இருந்தேன். தற்போது, நடிக்க வந்திருக்கேன். ரசித்து செய்தால், கஷ்டம் கூட, இஷ்டம் ஆகிவிடும் என, நினைக்கிறேன்.


பாலாவின் நாச்சியார் படத்தில் நடிப்பது பற்றி?


தேதிகள் எல்லாம் ரொம்ப, 'அட்ஜஸ்ட்' செய்து, இந்த படத்தில் நடிக்கிறேன்; 'போட்டோ ஷூட்' எடுத்த போதே பயந்தேன். பாலா சார், நம் நடிப்பை பார்த்து, என்ன சொல்வாரோ என்றெல்லாம் பயம் இருந்தது. ஆனால், அவர் என்னை அந்த டென்ஷனில் இருந்து, வெளிக்கொண்டு வந்து, சுலபமாக நடிக்க வைத்தார்; அவர் போல ஒரு ஆசிரியர் கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.


முன்னணி ஹீரோவாகும் ஆசை இருக்கா?


ஐயோ... ஆளை விடுங்க; என்னை மாட்டி விடாதீங்க. எனக்கு, அப்படி எல்லாம் ஆசையில்லை. என்னோட பாதையே வேறே. அந்த வழியில், நான் போயிட்டு இருக்கேன். நம்பர், 1, நம்பர், 2 வரிசையே வேண்டாம்; வம்பு, தும்பும் வேண்டாம். நானும், சினிமாவில், ஒரு ஓரமாக இருந்துட்டு போயிடுறேனே?

Advertisement
விவேகத்தில் அக் ஷராவுக்கு என்ன வேலை?விவேகத்தில் அக் ஷராவுக்கு என்ன வேலை? சொன்னதை செய்யவில்லை என்றால் சட்டையைப்பிடித்து கேளுங்கள்! -மிஷ்கின் ஆவேசம் சொன்னதை செய்யவில்லை என்றால் ...


வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
09 மார், 2017 - 04:59 Report Abuse
LAX ஆமா.. இவனுக்கு முன்னணி ஹுரோவாகும் ஆசையெல்லாம் இருக்காது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in