தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நடிகையர் திலகம்' என தமிழ்த் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சாவித்ரி. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அந்தக் காலத்தில் மிகச் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர். அவருடைய இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை.
நடிகை சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைப் படமாக்க தெலுங்கு இயக்குனரான நாக் அஸ்வின் கடந்த சில வருடங்களாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சாவித்ரியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ் இருந்து வந்தது. சமந்தா, வித்யா பாலன், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் என பலருடைய பெயர்கள் பேசப்பட்டு வந்தது.
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். 'மகாநதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடிக்க உள்ளார். சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்காக கடந்த ஒரு வருட காலமாக பலரைச் சந்தித்து பல தகவல்களைப் பெற்றதாகவும், தமிழ், தெலுங்கு இரு திரையுலகத்திற்கும் இப்படம் பெருமை சேர்க்கக் கூடிய படமாக இருக்கும் என்றும் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.