தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் சகுனம்... நல்ல நேரம்... கெட்ட நேரம் பார்க்காமல் திரையுலகினர் எந்த காரியத்திலும் இறங்கமாட்டார்கள். இதற்கு இயக்குநர் அட்லியும் விதிவிலக்கில்லை. விஜய்யும், அட்லியும் முதன் முதலாக இணைந்த 'தெறி' திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.
தெறி படத்தை தொடர்ந்து 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். 'விஜய் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
'தெறி' கடந்த வருட தமிழ் புத்தாண்டன்று வெளியாகி வெற்றிபெற்றதால் தற்போது இயக்கி வரும் 'விஜய் 61' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வருகிற தமிழ் புத்தாண்டன்று வெளியிட வேண்டும் என்று அட்லீ முடிவு செய்துள்ளாராம். இதற்கு விஜய்யும் ஓகே சொல்லி இருக்கிறார். படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று தன்னுடைய உதவியாளர்களிடம் தலா 5 டைட்டில்களை சொல்லும்படி கேட்டிருக்கிறாராம் அட்லீ.