ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கிவரும் படம் ‛லக்னோ சென்ட்ரல்'. பரான் அக்தர், தியான பென்ட்டி, ஜிப்பி, ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிகில் அத்வானி தயாரிக்கிறார். லக்னோ சிறையை மையமாக வைத்து, ஆயுள் தண்டனை பெற்று சிறையில் கைதியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில், சிறை கைதியாக பரான் அக்தர் நடிக்கிறார். மும்பையில், லக்னோ சிறை போன்ற செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‛லக்னோ சென்ட்ரல்' படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருக்கிறது.