பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அகில் : தி பவர் ஆஃப் ஜூவா படத்திற்கு பின்னர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் இரண்டாவது படத்தை, மனம், 24 போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளார். நாகார்ஜூனா தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து துவங்கவுள்ளன. அகிலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகிக்கான தேடலில் ஈடுபட்டு வரும் இயக்குனர் விக்ரம் குமார், பிரபல ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் பாப் ப்ரௌன்-ஐ இப்படத்தின் சண்டைக்காட்சிகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம். அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தி வின்டர் சோல்ஜியர், xXx, போன்ற புகழ்பெற்ற ஆங்கில படங்களில் பணியாற்றிய பாப் ப்ரௌன் அகில் நடிக்கவிருக்கும் அவரது அடுத்த படத்தில் சண்டைப்பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.