தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ரவி, சதா ஜோடி சேர்ந்து நடித்த ஜெயம் படத்தில் வில்லான நடித்த தெலுங்கு நடிகர் கோப்சந்த் டோலிவுட்டில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டவர். தெலுங்கு படங்களில் இன்றும் ஹீரோவாக நடித்து வரும் கோபிசந்த், பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பவன் கல்யாண் தற்போது வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் நடித்து வருகின்றார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கும் கட்டமராய்டு படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்திற்கு பின்னர் பவன் கல்யாண் அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கோபிசந்த் வில்லனாக நடிக்கக்கூடும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.