பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கதிர். இவர் தற்போது சிகை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெண் வேடத்தில் நடித்து வரும் கதிர் 'சத்ரு' என்ற படத்திலும் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்கும் இப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு இசை அமைத்துள்ள அம்ரிஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராதாமோகனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த நவீன் என்பவர் இயக்கி வருகிறார்.
நட்டி நட்ராஜ், ருஹி சிங் நடிப்பில் 'போங்கு' என்ற படத்தை தயாரித்திருக்கும் 'ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் 'சத்ரு' படத்தை தயாரித்திருக்கிறது. சத்ரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை நடிகர் சிம்பு வெளியிட்டார். அப்போது படத்தின் நாயகனான கதிர் இல்லை. கதிருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என்பதால் அவரை அழைக்காமலே விட்டுவிட்டனராம்.