சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
மிருதன் படத்திற்கு பிறகு சக்தி சவுந்தர்ராஜனும், ஜெயம்ரவியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் டிக் டிக் டிக். ஜெயம்ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், தன்ஷிகா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விண்வெளி ஷெட்டில் படமாகி வருகிறது. முதன் முதலாக தமிழில் தயாராகும் விண்வெளி திரைப்படம் இது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார். கேஎல் டிரிப்ட், 2 ஆலம், ஓம்பக் ரிண்டு, கீரத் 14, கேஎல் கேங்ஸ்டார் உள்பட 50க்கும் மேற்பட்ட மலேயா மற்றும் சீனப் படங்களில் நடித்துள்ளார். சீன, மலேசிய, சிங்கப்பூர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கபாலி படத்தில் இவர் தான் வில்லனாக நடித்திருக்க வேண்டியது. அப்போது அவர் டி.வி.சீரியல் ஒன்றில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்பை இழந்தார். தற்போது டிக் டிக் டிக் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.