'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்து வந்தபோது இனிமேல் இதே இமேஜ் தன்னை ஒட்டிக்கொள்ளுமோ என்று ரொம்பவே பயந்தார். அதனால் அதையடுத்து அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் வந்தபோது அவர் ஏற்கவில்லை. மாறாக, முடிந்தவரை ரொமான்டிக் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் தற்போது அவர் மீது பர்பாமென்ஸ் நடிகை என்கிற இமேஜ் விழுந்திருக்கிறது.
அதனால் அழுத்தமான கதைகள் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கிறார்கள் இயக்குனர்கள். ஆனால் அவரோ, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினாலும், இளைஞர்களை கவரும் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதோடு, அதிகமாக ரொமான்ஸ் செய்யாத ஹீரோக்களுடன் தான் நடித்தாலும், அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு அவர்களிடம் சகஜமாக பேசிப்பழகி, அவர்களையும் ரொமான்ஸ் மூடுக்கு மாற்றி அந்த காட்சியில் நடிக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி ஹீரோக்களும் இயல்பாக மாறி நடிக்கும்போதுதான் அந்த காட்சிகள் ரசிகர்களை கவரும் என்று கூறும் அவர், இனிமேல் நான் நடித்து வரப்போகிற படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் கூடுதலாகவே இருக்கும் என்கிறார்.