ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் நடித்த படம் ஓடாவிட்டாலும் தொடர்ந்து படம் தயாரித்து நடித்து வருகிறார் ஆர்கே. 'என் வழி தனி வழி' படத்தை தொடர்ந்து தற்போது ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் 'வைகை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஆர்.கே. எதிர்காலத்தில் கட்சி ஆரம்பிக்க தேர்வு செய்து வைத்திருக்கும் பெயரான 'மக்கள் பாசறை' என்ற நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரித்துள்ள இந்த படத்தில் நீத்து சந்திரா, இனியா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சுமார் இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இப்படத்தை இம்மாதம் 24 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார் ஆர்.கே. ரயிலில் நடக்கும் ஒரு கொலையை புலனாய்வு செய்ய வரும் ஒரு போலீஸ் அதிகாரி, அது சம்பந்தப்பட்டு நடக்கும் சம்பவங்கள் என்று பயணிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் ரயிலிலேயே நடைபெற்றுள்ளது.
பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான நெ20 மெட்ராஸ் மெயில் படத்தின் சாயலில் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.