Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவா - விஷ்ணு போட்டியில் அஜித்

07 மார், 2017 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Competition-between-Siva-and-vishnuvardhan-to-make-Ajith

அஜித்தின் 57வது படமான 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு இன்னும் பாக்கி உள்ளதால் படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதுவரை எவ்வளவு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சரியான தகவல் இல்லை. வெளிநாட்டிலேயே படத்தை எடுத்து வருவதால் படத்தின் பட்ஜெட் அதிகரித்துவிட்டதாகவும், அதனால்தான் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் செய்திகள் உலா வருகின்றன. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புகள் அனைத்தையும் இங்கேயே படமாக்க உள்ளார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள்.


இதனிடையே, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. அந்தப் போட்டி சிவாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையேயான போட்டியாகவே உள்ளது. அஜித் நடித்த 'வீரம், வேதாளம்' படங்களை இயக்கியவரும், தற்போது 'விவேகம்' படத்தை இயக்கி வரும் சிவா, அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்றும் ஒரு தகவல் உள்ளது.


ஆனால், 'பில்லா, ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ஏற்கெனவே அஜித்தின் அடுத்த பட இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். ஒரு சரித்திரக் கதையை எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து மெருகேற்றி வருகிறார் என்றும் மற்றொரு தகவல் உள்ளது.


அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும். அதில் வெற்றி பெறப் போவது சிவாவா, விஷ்ணுவா என்பதுதான் கேள்வி ?.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in