பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' பட வெளியீடு பற்றி கடந்த ஒரு மாத காலமாகவே குழப்ப நிலை நீடித்து வந்தது. பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ், பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் என்று இதற்கு முன் அறிவித்த தேதியில் படம் வெளிவராமல் போனது. படம் வெளிவருமா, வராதா என்ற நிலையே சில நாட்கள் முன் வரை நீடித்தது. படத்திற்கு பைனான்ஸ் செய்தவர்கள் உட்பட பலரும் படம் இப்போதைக்கு வெளிவராது என்றே கூறிவந்தார்கள்.
இதனிடையே, நீதிமன்றத்தில் படம் மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து படத்தை மார்ச் 10ம் தேதி வெளியிட முடிவு செய்தார்கள். அது பற்றிய நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் படம் 10ம் தேதி எந்தப் பிரச்சனையும் இன்றி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
10ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் மேலும் யாரும் சிக்கல் செய்தால் என்ன செய்வது என முடிவெடுத்து ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியே படத்தை வெளியிட தயாராகிவிட்டார்களாம். இரண்டு நாட்களுக்குள் வேறு யாராலும் படத்திற்குப் பிரச்சனை வந்துவிடக் கூடாது, நீதிமன்றம் சென்றாலும் திரும்பவும் படத்திற்கு தடை வந்துவிடக் கூடாது. இரண்டு நாள் அதற்கு போதுமானதாக இருக்காது என்ற ஆலோசனையின் பேரில் எடுத்த முடிவாம்.
அதே சமயம் படத்தின் தலைப்பிலேயே 'மொட்ட, கெட்ட' என்று வார்த்தைகள் இருப்பதால் சென்டிமென்ட்டாக அதுதான் படத்தின் சிக்கலுக்கும் காரணம் என கோலிவுட் ஜோசியர்கள் சிலர் சொல்லி வருகிறார்கள்.