தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது கோடம்பாக்கத்தை பீதியில் உறைய வைத்திருப்பவர் பாடகி சுசித்ரா. எந்த நேரத்தில் யாருடைய ஆபாச படம் அப்டேட் ஆகும் என்கிற அச்சத்தில் நடிகர் நடிகையர் வட்டாரம் கடும் கலவரத்தில் உள்ளனர். தனுஷ் தன்னை காயப்படுத்தி விட்டதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விவகாரம் அதையடுத்து திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சஞ்சிதா ஷெட்டி, ஹன்சிகா, அமலாபால், செல்வராகவன் என்று பலரது ஆபாசம் மற்றும் அந்தரங்க விசயங்கள் சுசித்ராவின் டுவிட்டரில் அவ்வப்போது அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கிறது. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. யாரோ மர்ம நபர்கள் இந்த மாதிரி ஆபாச புகைப்படங்களை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார் சுசித்ரா. சைபர் கிரைம் இதுகுறித்து நட வடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனபோதும், அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுக்கும் வகையில், சுசித்ராவின் டுவிட்டரில் ஆபாச படங்கள் அப்டேட் ஆகிக்கொண்டிருப்பது நிறுத்தப்படவில்லை. அதிலும் தனுஷை மட்டும் விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறார் சுசித்ரா. மொத்த கோபமும் அவர் மேல்தான் உள்ளது என்பது போன்று தொடர்ந்து தனுஷ், அமலாபால், தனுஷ் பார்வதி நாயர் சம்பந்தப்பட்ட மிரட்டல் வீடியோவை வெளியிடுவேன் என்று தெரிவித் துள்ளார் சுசித்ரா. ஆனால் இந்த கலவரம் நடந்து கொண்டிருந்தபோதும் அதுபற்றி தனுஷ் எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருக்கிறார்.
ஆனால் இப்படியே விட்டால், இன்னும் பெரிய அளவில் அதிர்ச்சி தரும் வீடியோ, போட்டோக் களை அப்டேட் செய்து பெரிய குழுப்பத்தை உண்டு பண்ணி விடுவார் சுசித்ரா என்று சிலர் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு சில நடிகர்கள் தனுஷை வலியுறுத்தி வருகிறார்களாம். அதனால் விரைவில் சுசித்ராவின் குற்றச்சாட்டு குறித்து தனுஷ் சரியான விளக்கம் கொடுப்பார் என்கிறார்கள்.
இதற்கிடையே, சுசித்ராவின் பின்னால் ஒரு பிரபல நடிகர் இருப்பதாகவும், அவர் இந்த விவகாரத்தை இத்தோடு முடிக்க விடப்போவதில்லை என்றும் கூறுகிறார்கள். அந்த வகையில், இன்னும் பல அதிர்ச்சி கூட்டும் ஆபாச படங்கள் வருவதை தடுக்க முடியாது என்றும் ஒருசாரர் கிசுகிசுக்கிறார்கள்.