பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அப்பா படத்தை அடுத்து சமுத்திரகனி இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் தொண்டன். அப்பா படத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி சம்பந்தமான பிரச்சினையை சொன்ன அவர், இந்த தொண்டன் படத்தில் சமூக அவலங்களை சொல்லியிருக்கிறார். கதைப்படி இந்த படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்பவராக நடித்துள்ளார் அவர். அவருடன் விக்ராந்த், தம்பி ராமைய்யா, நமோ நாராயணா, கஞ்சா கருப்பு, சுனைனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை பண்ருட்டியில் நடத்தி வந்த சமுத்திரகனி, நேற்று கடைசி நாள் பண்ருட்டியில் நடந்த படப்பிடிப்போடு பூசணிக்காய் உடைத்து விட்டார். ஏற்கனவே முதல் பாதியின் இறுதிக்கட்ட பணிகள் முடித்து விட்ட அவர், மீதமுள்ள வேலைகளை இந்த மாதத்திற்குள் முடித்து ஏப்ரல் முதல் வாரத்தில் தொண்டனை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம். அதனால் படத்தில் நடித்த மொத்த டீமுடன் இன்று சென்னை வரும் சமுத்திரகனி, சில தினங்களில் டப்பிங் வேலைகளை முடித்து விட்டு பின்னணி இசை வேலைகளில் ஈடுபடுகிறாராம்.