ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்கள் சுனைனாவுக்கு நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தன. என்றாலும் அதன்பிறகு அவர் நடித்த வன்மம், நம்பியார், கவலை வேண்டாம் படங்களின் தோல்வி அவரால் மார்க்கெட்டில் தலைநிமிர முடியவில்லை. அதனால் தற்போது கதாநாயகி என்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டார் சுனைனா. சமுத்திரகனி இயக்கியுள்ள தொண்டன் படத்தில் குடும்பப்பாங்கான ரோலில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி சுனைனா கூறுகையில், தொண்டன் படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு கலகலப்பான வேடங்களில் நடித்த நான் இந்த படத்தில் கலங்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். எமோசனல் காட்சிகளில் என்னை முழுமை யாக ஈடுபடுத்தி நடித்தேன். முக்கியமாக, எனக்குள் இருந்த இன்னொரு சுனைனாவை இந்த படத்தின் மூலம் வெளியே கொண்டு வந்திருக்கிறார் சமுத்திரகனி. அதனால் இந்த படம் எனக்கு தமிழ் சினிமாவில் அழுத்தமான ஒரு இடத்தை பிடித்து தருவதற்கான அடித்தளம் போட்டுள்ளது என்கிறார் சுனைனா.