Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரம்யாகிருஷ்ணன் சாப்ட்டான கேரக்டர்! -அகிலா

07 மார், 2017 - 08:58 IST
எழுத்தின் அளவு:
actress-ramyakrishnan-is-very-soft-hearted-says-akila

சின்னத்திரையில் பல தொடர்களில் லீடு ரோல்களில் நடித்தவர் அகிலா. குறிப்பாக, தாமரை சீரியலில் கணவரை டார்ச்சர் பண்ணும் வில்லி வேடத்தில் நடித்திருந்த அவர், வம்சம் தொடரில் ஒரு இன்னோசென்ட் வேடத்தில் என்ட்ரியாகி யிருக்கிறார். மேலும், கர்ஜனை படம் மூலம் சினிமாவிலும் வில்லியாகியிருக்கிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அகிலா அளித்த பேட்டியில், சீரியல்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். ஒவ்வொரு தொடர்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்கள். அப்படி நடித்து இப்போது எந்தமாதிரியான வேடங்கள் என்றாலும் சிறப்பாக நடிக்கும் அளவுக்கு நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும், ரம்யாகிருஷ்ணனின் வம்சம் சீரியலில் தற்போது சாவித்ரி என்ற கேரக்டர் மூலம் என்ட்ரியாகியிருக்கிறேன். இதில் முதன்முறையாக அப்பாவி பெண்ணாக நடிக்கிறேன். அதாவது இன்னோசென்ட்டையும் மீறி ஆப் மைண்டான கேரக்டரில் நடிக்கிறேன். கதைக்கு திருப்பம் தரக்கூடிய புது ட்ரேக்.


முக்கியமாக, நான் எந்த ரம்யாகிருஷ்ணனை ரோல் மாடலாக எடுத்துக்கொண் டேனோ அவருடனேயே இந்த தொடரில் நடிக்கிறேன். அது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளையும் அதிக இன்வால்வ் மெண்டோடு நடிக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் மேடத்தைப் பொறுத்தவரை உடன் நடிப்பவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். அதனால் அவருடன் நடிப்பது நல்ல அனுபவமாக உள்ளது.


மேலும், ரம்யா கிருஷ்ணனைப் பார்த்தாலே படையப்பா நீலாம்பரிதான் ஞாபகத் திற்கு வருவார். நான்கூட அந்த படத்தைப்பார்த்துதான் அவரை எனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டேன். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப சாப்ட்டானவர். இனிமையாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது எனக்கு ரொம்ப பெருமையாகவும், நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டதைப்போன்ற மனநிறைவும் ஏற்படுகிறது.


அதோடு, எதிர்காலத்தில் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதால், தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வரும் நான், சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். முக்கியமாக, சீரியலைப்போலவே நல்ல வேடங்களில் மட்டுமே நடிப்பேன். அது பாசிட்டீவ், நெகடீவ் எதுவாக இருந்தாலும் ஓகேதான். அதேசமயம், கண்டிப்பாக கிளாமராக நடிக்க மாட் டேன். நல்ல பர்பாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார் அகிலா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in