ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் ‛அனார்கலி' என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஸ்வரா பாஸ்கர் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படம் இம்மாதம் ரிலீஸாக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அனார்கலி படத்தில் ஸ்வரா, நடித்த சில நெருக்கமான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகின. இது படக்குழுவை மட்டுமல்ல, ஸ்வரா பாஸ்கரையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது... ‛‛இந்த சம்பவம் என்னை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது என்னமோ உண்மை தான். நாங்கள் நடிகைகள், அதனால் படத்திற்கு தேவையானபோது இதுபோன்ற காட்சிகளில் நடிக்கத்தான் வேண்டும். படத்தில் சில நிமிட காட்சிகளே வெளியாகியுள்ளன. இது படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று நம்புகிறேன். அனார்கலி மிகவும் அருமையான படம், அப்படியொரு படத்தை தான் நாங்கள் சொல்கிறோம். இதன் பின்னணியில் வேறு எந்த தவறான விஷயமும் இல்லை. ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், ஏனென்றால் கை தட்டவோ... விசில் அடிக்கவோ... அல்ல'' என்று கூறியுள்ளார்.
‛அனார்கலி' படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாகிறது.