'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி சங்கீதா. சின்னத்திரையுலகின் கன்னக்குழி அழகி. சங்கீதாவின் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. போனில் பேசும் நேயர்கள் "நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க ஏன் சினிமாவில் நடிக்க கூடாது?" என்ற போட்டுத் துளைத்து எடுக்க முதல் கட்டமாக விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சினிமாவில் ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்தார். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும், நீயும் நானும் என்ற புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒன்றிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அடுத்து ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இசை நிறுவனமான சரிகம தயாரிக்கும் படத்தில் சங்கீதா தான் ஹீரோயின். புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். விரைவில் முறையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இசை தொகுப்பாளினியை ஹீரோயின் ஆக்குகிறது சரிகம. என்ன ஒரு பொருத்தம்.