பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில சினிமாக்கள் மாணவர்களை போராட்ட காலத்திற்கு இழுத்து வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் அப்படி போராட கிளம்பிய மாணவர்கள் ஒன்றுகூடி ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து போராடுவதுதான் வழக்கம்.. ஆனால் கேரளாவில் நேற்றும் முன் வெளியான ஒரு படம் இரண்டு மாணவர் அமைப்புகளுக்குள்ளேயே சண்டையை மூட்டிவிட்டுள்ளது.. வளர்ந்துவரும் நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கும் 'ஒரு மெக்சிகன் அபராதா' படம் தான் இந்த வேலையை செய்துள்ளது.
எண்பதுகளின் காலகட்டத்தில் நடப்பதாக கதை பின்னப்பட்டுள்ள இந்தப்படத்தில் ஒரு கல்லூரியும் அதன் மாணவர்களின் இரு பிரிவினருக்கான அதிகார மோதலும் தான் கதைக்களம்.. தற்போது கேரளாவில் அனைவராலும் அறியப்படும் இரண்டு மாணவர் அமைப்புகள் தான் SFI (கம்யூனிஸ்ட் சார்பு) மற்றும் KSU (காங்கிரஸ் சார்பு) ஆகியவை.. ஆனால் இந்தப்படத்தில் இந்த இயக்கங்களின் பெயரில் சிறிய மாற்றங்களை செய்து SFY மற்றும் KSQ என்பதாக மாற்றிவிட்டனர்.
இந்த அமைப்புகளின் தலைவர்களாக இருக்கும் மாணவர்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக நடத்தும் பிரச்சனைகள் ஆகியவை உண்மையிலேயே நிஜத்தில் இருக்கும் இந்த இயக்கங்களின் மாணவர்கள் தரப்பில் மோதலை உருவாக்கிவிட்டுள்ளதாம். இதனால் எர்ணாகுளத்தில் ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்ட இந்தப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த இருதரப்பு மாணவர்களும் கடுமையாக மோதிக்கொண்டார்களாம். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பின்னர் இருந்தே இது தங்கள் தரப்பை தூக்கிப்பிடிக்கும் படம் என்பதாக நினைத்துக்கொண்டு SFI (கம்யூனிஸ்ட் சார்பு) ஆட்கள் தங்களது கொடிகளை சம்பந்தப்பட்ட தியேட்டர்களில் கட்டியதுதான் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.