தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இணையதளங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இணையத்திலிருந்து பாடல்களை டவுன்லோடு செய்து கேட்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது.இதன் காரணமாக திரைப்படங்களின் ஆடியோ வியாபாரம் பெருமளவில் சரிவை சந்தித்தது. முன்னணி இசையமைப்பாளர்களின் ஆடியோ கூட விற்பனையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் புதுமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆடியோவை யாருமே வாங்குவதில்லை. அதனால் வேறு வழியில்லாமல் யுடியூபில் பாடல்களை வெளியிட்டுவிட்டு நடையை கட்டிவிடுகிறார்கள்.
இப்படியான சூழலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் படம் '8 தோட்டாக்கள்' படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்ற புதுமுக இசையமைப்பாளர் இசை அமைக்கிறார். புதுமுகம் வெற்றி, அபர்ணா முரளி நடிக்க, விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்களை தனது 'யு 1 ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தின் மூலம் வெளியிடவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா!
வேறு ஒரு இசை அமைப்பாளர் இசை அமைத்த பாடல்களின் உரிமையை பிரபலமான ஒரு இசை அமைப்பாளர் வாங்கி வெளியிடுவது ஏன்? என்று விசாரித்தபோது, '8 தோட்டக்கள் படத்தின் பாடல்களை எந்த ஆடியோ கம்பெனியும் வாங்க முன் வரவில்லை. எனவே வளர்ந்து வரும் ஆடியோ நிறுவனமான யுவனின் 'யு 1 ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தை அணுகியபோது மார்க்கெட்டிங் அனுபவத்துக்காக இப்படத்தின் பாடல்களை யுவன் சங்கர்ராஜா வெளியிட முன் வந்ததாக சொல்கிறார்கள்.