அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ராணுவ பின்னணி சார்ந்த படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான மேஜர் ரவி இயக்கிய கீர்த்தி சக்ரா, குருசேத்ரா, காந்தகார் என மூன்று படங்களிலுமே மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். ராணுவத்தில் பணியாற்றும் மேஜர் மகாதேவன் என்பவர் தன் வாழ்வில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவமும் ஒரு படமாக மாறியது. இப்போது 1971-பியாண்ட் பார்டர்ஸ் என்கிற படத்தில் மீண்டும் மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்திற்கு மோகன்லால் மூலமாகவே உயிர் கொடுத்திருக்கிறார் மேஜர் ரவி.
இந்தமுறை 1971ல் பங்களாதேஷை முன்னிட்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரை பின்னணியாக கொண்டு கதையை உருவாக்கியுள்ளாராம் மேஜர் ரவி.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் மேஜர் மகாதேவனின் தந்தை கதாபாத்திரமாக மேஜர் சகாதேவன் என்கிற கேரக்டரையும் புகுத்தியதோடு, அதிலும் மோகன்லாலையே நடிக்க வைத்துள்ளார் மேஜர் ரவி.. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசரில் இரண்டு கேரக்டர்களையும் கிராமம், ராணுவதளம் என இருவேறு பின்னணியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மேஜர் ரவி.