நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. தான் நடன பயிற்சி மேற்கொள்ளும் சிறு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்திலும் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.