தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகராகிவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புட், அடுத்தடுத்து சில படங்களில் மும்முரமாய் நடித்து வருகிறார். அதில் ஒரு படமாக பிரபல இயக்குநர் கரண் ஜோகர் தயாரிக்கும் ‛டிரைவ்' படத்திலும் நடிக்கிறார். இதில் சுாந்த் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க, தருண் மனுசுகானி இயக்குகிறார். டிரைவ் படத்திற்கான அறிவிப்பை கரண், சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் வெளியிட்டார். அதில் சுசாந்த் - ஜாக்குலின் பின்புறமாக நின்றபடி, கிளாப்போர்ட்டை கையில் வைத்தபடி போஸ் தருகிறார்கள். ரொமான்ட்டிக், ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான படமாக டிரைவ் உருவாக இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.