‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அஜித்துடன் காஜல்அகர்வால் முதன்முறையாக இணைந்துள்ள படம் விவேகம். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் அக்சராஹாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்கிறது. இத்தோடு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்று தெரிகிறது.
மேலும், விவேகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக பல்கேரியாவில் நடந்தபோது, படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளையும் அவ்வப்போது இணைய பக்கத்தில் வெளியிட்டு வந்தார் காஜல்அகர்வால்.அதேபோல் அங்கு படப்பிடிப்பு நடந்த சில முக்கிய இடங்களையும் அவர் போட்டோ எடுத்து வெளியிட்டார். இதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த டைரக்டர் சிவா, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பின்போது காஜல்அகர்வாலுக்கு தடை போட்டுள்ளாராம்.
காரணம், விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவின் சில இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாம். குறிப்பாக கேமரா கண்களே படாத அந்த பகுதிகளை யாரும் செல்போனில் படமெடுத்து இணைய பக்கத்தில் வெளியிட வேண்டாம் என்று முன்கூட்டியே தடை போட் டுள்ளாராம் டைரக்டர் சிவா. குறிப்பாக, காஜல்அகர்வாலிடம் இந்த விசயத்தை சற்று அழுத்தமாகவே கூறியிருக் கிறாராம் அவர்.