தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமாகி பின்னர் சினிமாவில் நடித்து வருபவர் ஆஷாசரத். இமேஜ் பார்க்காமல் எந்தமாதிரியான வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வரும் அவர், மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் ஐஜி வேடத்தில் நடித்தார். அதையடுத்து அதே படத்தின் தமிழ், கன்னட ரீமேக்கிலும் அதே ஐஜி வேடத்தில் நடித்தார் ஆஷாசரத். ஆனால் அந்த படத்திற்கு பிறகு கமல் நடித்த தூங்காவனம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவருக்கு பின்னர் தமிழில் படங்கள் இல்லை.
ஆனால், தெலுங்கில் அனுஷ்கா நடித்து வரும் பாகுமதி படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர கெட்டப்பில் நடித்து வருகிறார். அதேப்போல், தமிழில் சமுத்திரகனி இயக்கி நடித்த அப்பா படத்தில் அவரது மனைவி வேடத்தில் நடிக்கயிருந்த ஆஷாசரத் கால்சீட் இல்லாமல் அப்போது நடிக்கவில்லை. ஆனால் தற்போது அப்படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து இயக்கும் சமுத்திரகனி, அதில் ஜெயராமின் மனைவியாக ஆஷாசரத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். மலையாளத்தில் ஆஷாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், அவரது கேரக்டருக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்கிறாராம் சமுத்திரகனி.