Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் பலாத்காரம் செய்பவர்களை துாக்கில் போட வேண்டும்: ரெஜினா

02 மார், 2017 - 01:28 IST
எழுத்தின் அளவு:
angry-regina

சென்னை பெண்ணாக இருந்தாலும், தமிழை விட, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில் இவர் நடித்து வெளி வர உள்ளது, மாநகரம் படம்; இதுகுறித்த தன் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ரெஜினா.


மாநகரம் படம் பற்றி சொல்லுங்க ?


இந்த படத்தை, புதுமுக இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். சொந்த ஊரை விட்டு, வேலை தேடி சென்னை வரும், நான்கு பேரின் கதை இது. அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் மையக் கரு. சென்னையின் பெருமையை சொல்லும் படமாக இது இருக்கும். ஒரு நாளில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் கதை. முதல் பாதி, பகலிலும், இரண்டாம் பாதி இரவிலும் நடப்பது போல், கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் அதிகமாக நடிப்பதில்லையே ஏன்?


எனக்கே, அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், திட்டமிட்டு செய்யும் விஷயமில்லை இது. யதார்த்தமாக நடந்தது தான். எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். அதனால் கூட, இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இப்போது தமிழில், நான்கு படங்களில் நடிக்கிறேன்; இனிமேல் இதுபோன்ற கேள்வி வராது என நினைக்கிறேன்.


சென்னை பொண்ணு நீங்க; பல ஊர்களுக்கும் சென்று வரும் நீங்க, சென்னையை, 'மிஸ்' பண்றீங்களா?


கண்டிப்பாக; எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும். வேலை விஷயமாக, ஹைதராபாத், பெங்களூரு அல்லது வெளிநாடுகள் எங்கே போனாலும், திரும்பியதும் சென்னையில் உள்ள வீட்டுக்கு வந்திடுவேன். அம்மா கையால், ரசம், 'பெப்பர் சிக்கன்' சாப்பிட ரொம்ப பிடிக்கும்.


எந்த மொழி படங்களில் உங்களுக்கு போட்டி அதிகம்?


இப்போதெல்லாம் அப்படி இல்லை; யார் உண்மையாகவே, சம்பந்தபட்ட ரோலுக்கு பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களுக்கு தான் சான்ஸ் கிடைக்குது; மற்றபடி, முகம் நல்லா இருக்குது என்றோ, உடல் அமைப்பு நல்லா இருக்கிறது என்றோ பார்ப்பதில்லை; அந்த கேரக்டர் தான் நடிகர்களை தேர்வு செய்கிறது என்று சொல்வேன். மற்றபடி போட்டி எல்லாம் இல்லை.வெற்றி படங்களில் யார் அதிகமாக நடிக்கின்றனரோ, அவர்கள் சிறிது காலம், 'பீல்டில்' இருப்பர். அதற்கு பின், வேறு ஒரு நடிகை வருவார். இப்படி தான், தற்போதைய திரையுலகம் இருக்கிறது.
தோழியருடன் அதிகமாக வெளிநாடுகளுக்கு போகிறீர்களாமே?


எனக்கு சினிமாவில் நிறைய தோழியர் உள்ளனர். கடந்தாண்டு, என் தோழியருடன் வெளிநாட்டுக்கு சென்றேன். அதற்கு பின், நேரம் கிடைக்கவில்லை.


தெலுங்கில் மட்டும் அதிகமாக கவர்ச்சி காட்டுகிறீர்களாமே?


ஒரு சில படங்களை தவிர, மற்ற எல்லா படங்களிலுமே குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடித்து வருகிறேன். நான் பயன்படுத்தும் உடைகளும் அப்படித் தான் உள்ளன. மற்றபடி, தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும், தமிழில் இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.


உங்களுக்கு பிடித்த நடிகை யார்?


நிவேதா தாமஸ் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு; ரொம்ப சிம்பிளா நடிக்கிறாங்க.


பாவனா விஷயத்தில் உங்க கருத்து?


இது, வெட்கக்கேடான விஷயம். இதை கேள்விப்பட்டதும், பயங்கர கோபம் வந்தது. ஒரு டீமை நம்பித் தான், நாங்கள் நடிக்கவே செல்கிறோம். அந்த நம்பிக்கைக்குரிய டீமில் இருப்பவர்களே, தவறு செய்தால், என்ன செய்வது?இப்படிப்பட்ட குற்றவாளிகளை, துாக்கில் போட வேண்டும். இதுபோன்றவர்களின் தண்டனை கடுமையாக்கப் பட வேண்டும். இந்த சம்பவத்துக்கு பின், மற்ற நடிகையரிடம் ஒரு பதற்றம் வந்துள்ளது. எல்லாருடயை வீட்டிலும், நடிக்க அனுப்பவே பயப்படுகின்றனர்.

Advertisement
கரைசேருவாரா ஜி.வி.பிரகாஷ்?கரைசேருவாரா ஜி.வி.பிரகாஷ்? பெண்களிடம் வாலாட்டுவோருக்கு தூக்கு தண்டனை: வரலட்சுமி ஆவேசம் பெண்களிடம் வாலாட்டுவோருக்கு தூக்கு ...


வாசகர் கருத்து (5)

Vaal Payyan - Chennai,இந்தியா
02 மார், 2017 - 16:47 Report Abuse
Vaal Payyan காதல் என்கிற பெயரில் நீங்கள் சினிமாவில் காட்டும் இவ் டீசிங் செயல்கள் எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா பாட்டு பாடி பின்னே சுற்றுவது கமெண்ட் அடிப்பது ... நண்பர்களோடு பின்னே சுற்றி திரிவது உங்களை எல்லாம் யார் தண்டிக்குறது ???
Rate this:
christ - chennai,இந்தியா
02 மார், 2017 - 14:04 Report Abuse
christ உடம்பின் அங்கங்களை அசிங்கமாக காண்பித்து பணம் சம்பாதிக்க நீங்கள் செய்யும் தவறான செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
02 மார், 2017 - 12:26 Report Abuse
Sathish சினிமாவில் முதலில் ஆபாசமாக நடிப்பதை தவிருங்கள். உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் என்னவேண்டுமானாலும் செய்வீர்களே.
Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02 மார், 2017 - 11:33 Report Abuse
Ramesh Rayen நீங்க நடிக்கும் போது கொஞ்சம் மூடிக்கிட்டு நடிக்கங்க, - ஏத்தி விட்டால் இப்படித்தான் நடக்கும்
Rate this:
Prabas.... - Dharmapuri,இந்தியா
02 மார், 2017 - 11:22 Report Abuse
Prabas.... ஹெலோ மேடம் தூண்டுபவர்களை ?.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in