Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைவசம் 10 படங்கள்.... ஜிவி பிரகாஷின் கால்ஷீட் புல்

01 மார், 2017 - 16:55 IST
எழுத்தின் அளவு:
10-movies...-GV-Prakash-callsheet-full

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஜிவி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய ‛வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து குறுகிய காலத்திலேயே நம்பர்-1 இசையமைப்பாளராக உயர்ந்தார். இசைப்பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கும்போதே திடீரென நடிகராக உருவெடுத்தார். பென்சில் படத்தின் மூலம் அவர் நடிகராக மாறினார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த டார்லிங் படம் முதலில் ரிலீஸானது. அப்படம் ஹிட் படமாக அமைய அதன்பின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு படங்களில் நடித்தார்.


இதில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் தோல்வியை தழுவினாலும், அவருக்கு என்று மினிமம் கியாரண்டி இருப்பதால் குறுகிய பட்ஜெட்டில் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முண்டியடிக்கின்றனர். இதனால் அவரது கால்ஷீட் புல்லாகியுள்ளது. தற்போது ‛புருஸ்லீ' படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இதுதவிர ‛அடங்காதவன்', ‛ஐங்கரன்', ராஜீவ் மேனன் படம், பாலாவின் ‛நாச்சியார்' படம், ‛அடங்காதவன்' இயக்குநருக்கு மற்றுமொரு படம், வெற்றிமாறன் படம்... என கைவசம் 10 படங்கள் வைத்திருக்கிறார். இதில் சில படங்களுக்கு அவரே இசையமைக்கவும் உள்ளார். ஆக நடிப்பு, இசை என பிஸியாக வலம் வருகிறார். இந்தாண்டு முழுக்க அவரது கால்ஷீட் டைரி புல்லாகிவிட்டது. இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு அடுத்த வருடம் தான் புதிய படங்களை கமிட் செய்ய உள்ளார் ஜிவி பிரகாஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in