பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
படங்கள் தியேட்டர்களுக்கு வந்து 50 நாள், 100 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடிய காலம் மலையேறி விட்டது. விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவுக்கு பிறகு கோலிவுட்டில் எந்த படங்களின் வெற்றி விழாக்களும் நடைபெறவில்லை. சிலர் தங்களது படங்கள் 100 நாள், 200 நாட்கள் ஓடியதாக சொல்லிக்கொண்டாலும் விழா எடுப்பதில்லை.
அதேசமயம், ட்ரெய்லர்களை இணையதளங்களில் வெளியிட்டு அதை லட்சக் கணக்கானோர் பார்த்து ரசித்து லைக் கொடுத்ததாக வெற்றி விழா போலவே கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். அதனால், முன்னணி நடிகர்களை வைத்து இணையதளங்களில் ட்ரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு அதை ரசிகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அந்தவகையில், மஞ்சப்பை ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கடம்பன் படத்தின் தியேட் டர் டிரைலரை நடிகர்கள் சூர்யா-மாதவன் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டரில் நாளை (மார்ச் 2-ந்தேதி) மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.