பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விக்ரம் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய படம் ராஜபாட்டை. இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த சுசீந்திரனுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் அப்படம் பிளாப் ஆனது. அதேபோல் விக்ரம் நடித்ததில் அவர் ரசிகர்களுக்கு பிடிக்காத படமாகவும் அது அமைந்தது. அந்த படத்திற்கு கதை எழுதியவர்தான் சீனுவாசன். அவர்தான் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை என்ற படத்தை இயக்குகிறார்.
இந்த விவரங்கள் முதலில் விஜய் ஆண்டனிக்கு தெரியாதாம். ஆனால், பின்னர் அவர்தான் ராஜபாட்டைக்கு கதை எழுதியவர் என்பது தெரிந்ததும் உசாராகி விட்டாராம். அவரிடத்தில் அண்ணாதுரை படத்தின் கதையை ஒன்றுக்கு பலமுறை துருவி துருவி கேட்டாராம். அதோடு, எப்போதும் கதைகளை கேட்டு முடித்ததும் தன்னை சார்ந்தவர்களிடம் அந்த கதையை சொல்லி அதுபற்றி கருத்து கேட்கும் விஜய் ஆண்டனி, சீனுவாசனை பலமுறை கதை சொல்ல வைத்து அனைவருமே ஓகே சொன்ன பிறகே அந்த கதையில் நடிக்க சம்மதித்தாராம்.